Editorial / 2020 ஏப்ரல் 30 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், எஸ்.எம்.இர்ஷாத், பாறுக் ஷிஹான்
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் முடக்கப்பட்டிருந்த ஒரு பகுதி மூன்று வாரங்களின் பின்னர் நேற்று (29) திறந்து விடப்பட்டதாக, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்ட அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் வசித்து வந்த பிரதேசமே முடக்கி வைக்பப்பட்டு, இவ்வாறு திறந்து விடப்பட்டுள்ளது.
இம்மாதம் 8ஆம் திகதி இப்பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கிலக்காகியதாக ஒருவர் இனங்காணப்பட்டதனைத் தொடர்ந்து இப்பிரதேசம் முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இப்பகுதியில் இரண்டாவது நபரும் இத்தொற்றுக்கு இலக்காகியதாக அடையாளம் காணப்பட்டார்.
குறித்த தொற்றுக்குள்ளான நபர்கள் வசித்து வந்த பிரதேசமான 500 மீற்றர் சுற்றுவட்டாரம் சுமார் மூன்று வாரங்களாக முடக்கப்பட்டிருந்தது. இப்பிரதேசத்தில் வசித்து வந்த சுமார் 320 குடும்பங்களைச் சேர்ந்த 900 பேர் வெளிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அத்தோடு குறித்த பிரதேசத்திற்கு வெளிப் பிரதேசத்திலிருந்து வருகை தரும் எவரும் இப்பிரதேசத்தினுள் அனுமதிக்கப்படவுமில்லை.
இப்பிரதேசத்தின் சில வீதிகள் பாதுகாப்புத் தரப்பினரால் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததோடு, இராணுவத்தினர் பொலிஸார் போன்றோரின் விசேட ரோந்து நடவடிக்கைகளும் இடம்பெற்று வந்தன.
இப்பிரதேசத்தில் வசித்து வந்த கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட இருவரும், வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவ்விருவரும் சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
10 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago