2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரை நீக்க நடவடிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம். இர்சாத்

அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுல்பிகாரை கட்சியிலிருந்தும் மாநகர சபைப் பதவியிலிருந்தும் நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எல் தவம் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்குவதென்று இன்னும் முடிவெடுக்காத நிலையில், அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சுல்பிகார், அண்;மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, வீடமைப்பு, கலர்சார அமைச்சர் சஐPத் பிரேமதாஸவை சந்தித்து, அவரை ஆதரித்தல் சம்பந்தமாகக் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்,      

தான் சார்ந்துள்ள கட்சியினருக்கோ ஏனைய உறுப்பினர்களுடனோ கலந்தாலோசிக்காமல் இவ்வாறு நடந்து கொண்டமைக்கு எதிராக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான ஏ.எல் தவமினால், இன்று (08) இடம்பெற்ற கட்சியின் முக்கியஸ்தர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டமொன்றில் மேற்படி நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம் ஏக மனதாக எட்டப்பட்டது.

எதிர்வரும் 14 நாள்;களுக்குள் இது தொடர்பான விளக்கத்தை சுல்பிகார் வழங்க வேண்டும் எனவும் தவறும் பட்சம் கட்சியிலிருந்தும் மாநகரசபைப் பதவியிலிருந்தும் நீக்கப்படுவார் என ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கட்சியின் முக்கியஸ்தர்களும் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X