2025 மே 05, திங்கட்கிழமை

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயருக்குப் பிணை

கனகராசா சரவணன்   / 2019 ஜனவரி 17 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் இன்று (17) பிற்பகல் கைதுசெய்யப்பட்ட, அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி, ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில், கொழும்பு மேலதிக நீதவான் சனோஜா லக்மாலியினால் விடுதலை செய்யப்பட்டார்.

இதேவேளை, எதிர்வரும் 29ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையிலும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலமொன்றை வழங்குமாறும் நீதவான் பணித்துள்ளார்.  

அவர், மருதானை பிரதேசத்தில் வைத்து இன்று (17) கைதுசெய்யப்பட்டார்.

பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பிலான நபரொருவருடன் அரச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், தகவல்களை வழங்கினாரென்ற அவருக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்காக, அவருக்கெதிராக பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X