2025 மே 08, வியாழக்கிழமை

அக்பரை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்கு மகஜர்

Editorial   / 2019 செப்டெம்பர் 01 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹமத்துல்லா, எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை ஜமாத்தே இஸ்லாமிய முன்னாள் தலைவர் உஸ்தாத் றசீட் ஹஜ்ஜுல் அக்பருக்கு எதிரான விசாரணைகளைத் துரிதப்படுத்தி, அவரை விடுதலை செய்யுமாறு, முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, ஜனாதிபதிக்கு அவசர மகஜர் அனுப்பி வைத்துள்ளார். 

அம்மகஜரில், அக்பரின் கைது தொடர்பாக முஸ்லிம் சமூகம் கவலையும், அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக்க குறிப்பிட்டுள்ள அவர்,  கடந்த ஜம்பது வருடங்களாக அவரது பேச்சுகள், செயற்பாடுகள், எழுத்துகள் என்பன எந்தவொரு சந்தர்பத்திலும் நாட்டின் இறைமைக்கு எதிராகவோ, அரசியல் யாப்புக்கு முரணாகவோ அமைந்ததில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.

அக்பருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும், முறைப்பாடுகளையும் அவர் மீது கொண்ட காற்புணர்ச்சி காரணமாகவே முன்வைக்கப்பட்டதாக முஸ்லிம் சமூகம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இவரை விடுதலை செய்ய வேண்டுமென, நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X