Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 24 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜி.ஏ.கபூர்
அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் புதிய பணியகத்துக்கான அடிக்கல் நடும் வைபவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் அக்கரைப்பற்று பிரதான வீதியில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் அட்டாளைச்சேனை கிழக்கிழங்கை அரபிக் கல்லூரியின் அதிபருமான மௌலவி எம்.ஏ.அப்துல் லெத்தீப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினரும், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் முன்னாள் பொது சனத் தொடர்பு உத்தியோகத்தருமான எஸ்.எம்.ஸபீஸ், ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவரும் அபூபக்கர் சித்தீக் அரபுக் கல்லூரியின் அதிபருமான மௌலவி எம்.எம்.கலாமுதீன், பொதுச்செயலாளரும் அக்கரைப்பற்று கல்வி வலய இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகருமான மௌலவி ஏ.ஆர்.ஏ.மனாப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் புதிய பணியகத்தை அமைப்பதற்கான இடத்தினை அக்கரைப்பற்று புளட்ஸ் கழகம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
31 minute ago
31 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
31 minute ago
31 minute ago
44 minute ago