2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

அடிக்கல் நாட்டிவைப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

அக்கரைப்பற்று விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கு நிர்மாணத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (08) சனிக்கிழமை இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக்கல்லினை நட்டி வைத்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் வேண்டுகோளுக்கிணங்க விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் இந்த அரங்கம் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X