2025 மே 22, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்கு அபிவிருத்தி

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலைக்கு திங்கட்கிழமை (01) விஜயம் செய்து அங்கு நடைபெற்ற கூட்டத்தின்போதே, அவர் இதனைக் கூறினார்.

75 வருடங்கள்  பழமை வாய்ந்த இக்கலாசாலையை  அபிவிருத்தி செய்து மாற்று நடவடிக்கை எடுக்கலாமென எண்ணுவதாக அவர் கூறினார்.

இதை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையாக கொண்டு செல்ல முடியாவிட்டால், அரசாங்கத்தின் புதிய கல்வி திட்டத்துக்கமைய திறன் அபிவிருத்தி அமைச்சினூடாக இளைஞர், யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்கவதற்கான நிலையமாக எதிர்காலத்தில் மாற்றக்கூடிய சூழ்நிலை ஏற்படலாமெனவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X