2025 ஜூலை 17, வியாழக்கிழமை

அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் எம்.பி பதவியை வழங்குமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 01 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கு வழங்கப்பட வேண்டிய தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியானது காலம் தாழ்த்தப்படாமல்; விரைவாக வழங்கப்பட வேண்டும் என  அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல் சம்மேளனம் கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பான கலந்துரையாடல் அட்டாளைச்சேனைப் பிரதேச கலாசாரக் கூட்ட மண்டபத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்றபோதே, இக்கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவத்தால் அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உடனடியாக வழங்குவதற்கு மு.கா தலைமைத்துவம் முன்வர வேண்டும். இது தொடர்பில் மு.கா தலைமைத்துவம் செயற்படாது போனால், இப்பிரதேசத்தைச் சேர்ந்த 06 உச்ச பீட உறுப்பினர்களும் தங்களின் பதவிகளை இராஜினாமாச் செய்து, அகிம்சை வழிப் போராட்டங்களை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி சம்மேளனத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய சமூகத்தின் நலனுக்காக தாம்; செயற்படவுள்ளதாக இதன்போது அவர்கள் உறுதியளித்தனர்.

மேலும், இப்பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தலைமை விரும்பும் எவருக்காவது வழங்குவதற்காக  விட்டுக்கொடுப்புடன் செயற்படுவதற்குத் தாம் தயாராகவுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X