Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேச செயலாளர் பிரிவில்; சுமார் 600 மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக அப்பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தெரிவித்தார்.
இவர்களில் சுமார் 115 பேருக்கு மாதாந்தம் 03 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு சமூக சேவைத் திணைக்களத்தின் மூலம்; வழங்கப்படுவதுடன், 25 மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்குச் சம்பு நகர் பிரதேசத்தில் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
டிசெம்பர் 03ஆம் திகதி சர்வதேச வலது குறைந்தோர் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசளிப்பு விழாவும் கருத்தரங்கும் பாலமுனை இப்னு ஸீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை நடைபெற்றன. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, மாற்றுத்திறனாளிகளை சமூகத்திலுள்ளவர்கள் கௌரவப்படுத்த வேண்டும். அவர்களுக்கான பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் ஆரம்பித்துள்ளன. தற்போது மாற்றுத்திறனாளிகள் சமூகத்தால் ஒதுக்கப்படுகின்றார்கள். இவர்களிடத்தில் ஏதோ ஒரு திறமை மறைந்திருக்கின்றது. அதனை நாம் கண்டறிந்து வெளிப்படுத்துவது கடமையாகும்' என்றார்.
2 hours ago
3 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
19 Jul 2025