2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அடையாள வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 13 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் கடமையை செய்யவிடாது இடையூறு விளைவித்த நபர்களை கைதுசெய்யுமாறு கோரி இன்று வெள்ளிக்கிழமை காலை  மேற்கொண்ட அடையாள வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் தெரிவித்தார்.

கடந்த 09ஆம்; திகதி விபத்தில் காயமடைந்த  ஒருவரை  வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளித்துக்கொண்டிருந்தபோது, வெளியில் நின்ற சிலர் வைத்தியர்களுக்கும் மருத்துவ தாதி உத்தியோகஸ்தர்களுக்கும் கடமையைச் செய்யவிடாது பங்கம் ஏற்படுத்தினர்.  இதனால் வைத்தியர்கள் மன உளைச்சலுக்குள்ளாகினர்.  எனவே, இதில் சம்பந்தப்பட்வர்களைக் கைதுசெய்யுமாறும் கடமைக்கு பங்கம் விளைவித்தமையைக் கண்டித்தும் அடையாள வேலைநிறுத்தம் காலை 08 மணி முதல் மாலை 04 மணிவரை மேற்கொள்ளப்படவிருந்தது. பொத்துவில் பிரதேச பள்ளிவாசல் சம்மேளனம், அரசியல் பிரதிநிதிகள், சமூகத் தலைவர்கள், பொலிஸார் ஆகியோர் இன்றையதினம் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தையை அடுத்து, முற்பகல் 11.30 மணியளவில் இவ்வேலைநிறுத்தம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்களை ஒருவார காலத்தினுள் கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸார் வாக்குறுதி அளித்தனர்.  இவர்கள் கைதுசெய்யப்படாத பட்சத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .