Editorial / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
தலைக்கவசம் அணியாமை, வீதி ஒழுங்கை சரியாகக் கடைப்பிடிக்காமை உள்ளிட்ட காரணங்களாலேயே, அட்டப்பளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தாரென பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை – நிந்தவூர், அட்டப்பளம் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (06) இரவு 8.30 மணியளவில் ஏற்பட்ட விபத்து குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, பொலிஸார் இவ்வாறு தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து தொடர்ந்துரைத்த அவர், சம்பவ இடத்தில் பலியான 4 பிள்ளைகளின் தந்தையான அலியார் காசீம் மொஹமட் இர்சாட் (வயது-34) என்பவர், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற போது, தலைகவசம் அணிந்திருக்கவில்லையெனவும் உள்ளூர் வீதி ஒன்றில் இருந்து பிரதான வீதியைக் கடக்கின்ற போது, வீதி ஒழுங்கு முறையை சரியாக கவனிக்காமல் சென்றதால் தான் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளை நேருக்கு நேர் மோதிய தனியார் சொகுசு பஸ்ஸை செலுத்திய சாரதியான அம்பலாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த சமிந்த பிரியதர்ஷன (வயது - 41) என்பவர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், உரிய வழித்தட அனுமதிப்பத்திரம் இன்றி குறித்த பஸ்ஸை அதி வேகத்தில் செலுத்தியதாகவும் கூறினர்.
இவ்விபத்தையடுத்து, அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ மாரப்பன வழிகாட்டலின் கீழ், சம்மாந்துறை அம்பாறை விசேட போக்குவரத்து பொலிஸாரால் குறித்த பிரதேசத்தில், விசேட வீதி சோதனை நடவடிக்கை நேற்று (07) முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10 minute ago
12 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
33 minute ago
1 hours ago