2025 ஜூலை 07, திங்கட்கிழமை

அணைக்கட்டு புனரமைப்பு: நெல் விதைப்பு மேற்கொள்ளமுடியாத நிலை

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 15 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஒலுவிலிலுள்ள சீனம்பிட்டிக்கண்ட காட்டுவெளிக்குச் செல்லும் பிரதான பாதையில் அமைந்துள்ள நீர்ப்பாசன அணைக்கட்டின் புனரமைப்புக் காரணமாக காட்டுவெளி வயலில்; நெல் விதைப்பை உரிய காலத்தினுள்  மேற்கொள்ள முடியாதுள்ளதாக  சீனம்பிட்டிக்கண்ட வட்ட விதாணை ஐ.எல்.மீரா முகைதீன் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

இதனால்; விதை நெல், உரம், உழவு இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டுசெல்ல முடியாமல் விவசாயிகள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

காட்டுவெளிக்கண்டத்தில் 250 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அக்கரைப்பற்று பிராந்திய நீர்பாசனப் பொறியியலாளர் எம்.மயூரனிடம் கேட்டபோது, 'மேற்படி  அணைக்கட்டின் புனரமைப்பு வேலை பூர்;த்தியாக்கப்பட்டவுடன்  எதிர்;வரும் 25ஆம் திகதி போக்குவரத்துக்காக திறந்து விடப்படும்' என்றார்.

இவ்வாறிருக்க, அம்பாறை மாவட்டத்தில் வேளாண்;மைச் செய்கைக்கான நெல் விதைப்பு வேலையை இம்மாத இறுதிக்குள் செய்து முடிக்க வேண்டுமென  மாவட்ட அரசாங்க அதிபர் பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .