2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அதிகாரிகள் - மக்கள் முறுகல்; ஐவர் கைது

Princiya Dixci   / 2021 ஜனவரி 03 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி, கனகராசா சரவணன்

பொத்துவில், பாணமை காட்டுப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (01) சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, அங்கு பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுத்தை தாக்கி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பாணமையில் உள்ள வனவிலங்கு காரியாலயத்துக்குள் நுழைந்த சிலர், அலுவலகசத்தைச் சேதப்படுத்தியதன் விளைவாக இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

முன்னதாக சந்தேக நபர்கள் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்படும் இரு ஓட்டோக்கள், சாவிக் கொத்துக்கள், காலணிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து தொடர் விசாரணையில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

சிறுத்தைப் புலியினால் கொல்லப்பட்டவரை, வன விலங்கு அதிகாரிகள் காப்பாற்ற முன்வராததே கிராம மக்களின் சீற்றத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .