2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அதிரடிப்படையினரால் எழுவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 01 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில் விற்பனை செய்வதற்காக 05 கஜமுத்துகள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 07 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பிரதேசத்திலிருந்து கல்முனைக்கு கஜமுத்துகளை விற்பனை செய்வதற்காக வான் ஒன்றில் கொண்டு வந்துள்ளதாக, கடற்படையினருக்கும் இராணுவத்தினருக்கும் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்றிரவு (31) 07.30 மணியளவில் கல்முனைப் பிரதேசத்திலுள்ள சுற்றுலா விடுதியொன்றை சுற்றி வளைத்த போது சந்தேக பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களுடைய  வானும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, இது தொடர்பாக பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X