2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

அத்தியவசிய சேவைகள் சிறந்த முறையில் முன்னெடுப்பு

Editorial   / 2022 பெப்ரவரி 22 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

கொவிட்-19 தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ள நிலையிலும் மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியவசிய சேவைகளும் மற்றும் நலன்புரி சேவைகளும் அரசாங்காத்தினால் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் அந்தரங்கச் செயலாளர் அஞ்சன திஸாநாயக்க தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு வடிகட்டி வழங்கும் வைபவம்,  அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் நஹீஜா முஸாபிர் தலைமையில் இன்று (22) நடைபெற்றது.

இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கியத் திட்டத்தின் கீழ் நஞ்சற்ற உணவு உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இங்கு வழங்கப்படுகின்ற வடிகட்டியை நீங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி சுகதேகிகளாக வாழ வேண்டும்.

“நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு சிறு கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளது.

“கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதனூடாக, நாட்டின் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X