2025 மே 22, வியாழக்கிழமை

அபிவிருத்தி நடவடிக்கைகளை முடக்க முயற்சி

Kogilavani   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா
'என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட ஓர் அரசியல்வாதி, சதி முயற்சிகளை மேற்கொண்டு, நான் முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முடக்க முயற்சிக்கின்றார்' என கல்முனை தொகுதி இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.தில்சாத் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் இடம்பெறும் 'சிரம சக்தி' அபிவிருத்தி தொடர்பில் விளக்கமளித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் காலத்தில்,  சிறப்பாக பணியாற்றும் நோக்கில்  சிரம சக்தி வேலை திட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன். இதன்கீழ், சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் கடின பந்து பயிற்சி கூடம் மற்றும் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் என்பவற்றை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றேன்.

இதற்கு எமது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் இளைஞர் சேவைகள் அதிகாரி ஆகியோர்; முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றனர்.

அதன்பேரில் கரப்பந்தாட்ட மைதான அமைவுக்கு புறம்பாக அமைக்கவுள்ள ஒரு பக்க வேலிக்கு தேவையான கம்பி வலையை சாய்ந்தமருது இரண்டாம் பிரிவில் கடந்த பல வருடங்களாக அழிவுற்று கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்ற சிறுவர் பூங்காவில் இருந்து பெறுவதற்காக இளைஞர் சேவைகள் அதிகாரி ஊடாக பிரதேச செயலாளரிடம் நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதற்கிணங்க பிரதேச செயலாளர் அந்த சிறுவர் பூங்காவில் பயனற்றுக்கிடக்கும் கம்பி வலையை கரப்பந்தாட்ட மைதானத்துக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

ஆனால் அது மாநகர சபைக்கு சொந்தமான சொத்து என்றும் அதனை நான் உடைத்து அகற்ற முற்பட்டதாகவும் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் எனக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். அத்துடன் சில சிறு பிள்ளைகளைக் கொண்டு ஆர்ப்பாட்டம் ஒன்றையும் அவர் அரங்கேற்றியுள்ளார். இது கோழைத்தனமான நடவடிக்கையாகும்.

என் மீது அவர் கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக நான் முன்னெடுக்கின்ற அபிவிருத்திப் பணிகளை முடக்குவதற்காகவே இவ்வாறான போலி முறைப்பாட்டைச் செய்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் பிரதேச செயலாளர் மற்றும் இளைஞர் சேவைகள் அதிகாரி போன்றோரின் ஆவணங்களும் குறித்த முறைப்பாடு தொடர்பில் பிரதேச செயலாளர் பொலிஸுக்கு கொடுத்துள்ள வாக்குமூலமும் என்னை நிரபராதி என்று நிரூபணம் செய்துள்ளன.

எவ்வாறாயினும் இத்தகைய சில்லறை அரசியல்வாதிகளின் போலியான புகார்களுக்கு நான் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. அத்துடன் என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஓர் இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்த கல்முனைத் தொகுதி இளைஞர்களுக்கும் பொதுவாக மக்களுக்கும் நான் ஆற்றுகின்ற பணிகளில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X