2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபராதம் செலுத்துவதற்கான சலுகைக் காலம் நீட்டிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 27 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால், செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான அபராதப் பத்திரங்களுக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கு சலுகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபதி ரஞ்ஜித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர், நிதி அமைச்சின் செயலாளரின் இணக்கப்பாட்டுடன் இச் சலுகைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், மே மாதம் 02 ஆம் திகதி வரை இச்சலுகை காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அறிவித்துள்ளார்.

மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு பிறகு வழங்கப்பட்டுள்ள அபராதப் பத்திரங்களுக்கு மட்டுமே மேலதிக கட்டணங்கள் இல்லாமல் தபால் நிலையங்களில் அபராதப் பணத்தை செலுத்துவதற்கான சலுகை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 16 தொடக்கம் 29 வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள அபராதப் பண பத்திரங்களுக்கு மேலதிக கட்டணத்துடன் அவற்றைச் செலுத்த மே 02ஆம் திகதி வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக ஊரடங்கு அமுலில் உள்ள பகுதிகளில் தபாலகங்கள் திறக்கப்பட்டதும் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால எல்லை பற்றி தீர்மானிக்கப்படுமெனவும், அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .