2025 மே 13, செவ்வாய்க்கிழமை

‘அபிவிருத்தியை கட்டியெழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கும் சமூக உறவை கட்டியெழுப்புவதற்கும் இளைஞர்கள் முன்வர வேண்டுமென, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சர்வ மதக் குழுவின் ஏற்பாட்டில், பிரதேச இளைஞர்கள், சர்வ மதக் குழுவினருக்கும் விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு, அக்கரைப்பற்று மாநகர சபை நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

உதவிப் பணிப்பாளர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “ஒரு மதத்தினுடைய கலாசாரத்தை, ஏனைய மதத்தவர் புரிந்து செயற்படுமாயின் கடந்த காலங்களில் ஏற்பட்ட இனப் பிரச்சினை ஏற்பட்டிருக்காது.

“எதிர்காலத்தில் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க கூடிய ஒரு நிலையான திட்ட வரைபை சர்வமதக் குழுவினர் ஊற்படுத்த வேண்டும். அதனூடாகத்தான் நிரந்தரமான சமாதானத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

“இளைஞர்கள், நாட்டின் அபிவிருத்திக்கும், இன உறவை வளர்ப்பதற்காகவும் அரசாங்கத்தால் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, இதற்கென அமைச்சும் ஏற்படுத்தப்பட்டு, கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

“மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியுடன் அனர்த்தக் குறைப்பு செயற்றிதிட்டத்தையும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கிராமங்கள் தோறும் காணப்படுகின்ற அனர்த்த முகாமைத்துவ தொண்டர் குழுவினரையும் இளைஞர்களையும் வழிப்படுத்துவதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X