Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2016 நவம்பர் 07 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறைக் கல்வி வலயத்தில் 105 பாடசாலைகள் காணப்படுகின்ற நிலையில், 07 பாடசாலைகளில் அதிபர்களுக்கும் 07 பாடசாலைகளில் உப அதிபர்களுக்கும் 25 பாடசாலைகளில் பிரதி அதிபர்களுக்கும் வெற்றிடங்கள் காணப்படுவதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஹசந்தி தெரிவித்தார்.
இதேவேளை, இவ்வலயத்தில் 155 ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இவ்வலயத்திலுள்ள 105 பாடசாலைகளுக்கு 784 ஆசிரியர்கள் தேவையாக உள்ளபோதும், 629 ஆசிரியர்களே கடமையாற்றுவதாகவும் அவர் கூறினார்.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இதன்போது, அம்பாறைக் கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர்களின் குறைபாடுகள் தொடர்பில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுள பெர்ணான்டோ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'க.பொ.த. உயர்தர வகுப்புக்கும் ஆசிரியர்கள் தேவையாக உள்ளனர். கலைப்பிரிவுக்கு 03 ஆசிரியர்களும் வர்த்தகப் பிரிவுக்கு 05 ஆசிரியர்களும் விஞ்ஞானப் பிரிவுக்கு 01 ஆசிரியரும் கணிதப் பிரிவுக்கு 03 ஆசிரியர்களும் தொழில்நுட்பப் பிரிவுக்கு 05 ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர்.
தரம் -10, 11இல் கணிதப் பாடத்துக்கு 44 ஆசிரியர்களும் விஞ்ஞானப் பாடத்துக்கு 09 ஆசிரியர்களும் தமிழ் மற்றும் சிங்களப் பாடங்களுக்கு 33 ஆசிரியர்களும் ஆங்கிலப் பாடத்துக்கு 18 ஆசிரியர்களும் வரலாற்றுப் பாடத்துக்கு 34 ஆசிரியர்களும் தேவைப்படுகின்றனர் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
8 hours ago