2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் சந்திப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்,ஏ.ஜி.ஏ.கபூர்

அம்பாறை மாவட்ட தமிழ் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் நேற்று திங்கட்கிழமை(21) மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து தங்களது நிலைமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளனர்.

மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட முக்கிய உறுப்பினர்கள் தங்களது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியதுடன் கோரிக்கையினையும் முன்வைத்தனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் உள்ளிட்ட சில தொழில் வாய்ப்புக்களில் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாக விளக்கியதுடன் தங்களுக்கு நாட்டில் நிலவும் நல்லாட்சி ஊடாக நியாயமான தீர்வினை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த அரசாங்க அதிபர் துசித்த வணிகசிங்க,

இப் பிரச்சினை தொடர்பில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பிலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவித்து உரிய தீர்வினை பெற்றுத்தர ஆக்கபூர்வமான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.இன பாகுபாடின்றி எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பு வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் மகஜர் ஒன்றும் மாவட்ட செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் 2013 பட்டதாரிகளும் 58 எச்.என்.டி.எ பட்டதாரிகளும் தொழில் வாய்ப்பின்றி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X