2025 மே 22, வியாழக்கிழமை

அம்பாறை மக்கள் பதவிகளுக்கு சோரம் போனவர்கள் அல்ல

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்கள் பதவிக்காக சோரம் போய் ஏமாற்றப்பட்டார்கள் என்று முன்னாள் மகாண சபை அமைச்சரும்  கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான  எம்.எஸ் .சுபைர்  தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது என பிரதி அமைச்சர் அமீர் அலியின் இணைப்புச் செயலாளர்  எம்.எம்.ஹலீல்  தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் சனிக்கிழமை(06) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அட்டூழியங்களும் இகொடுமைகளும் அனியாங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டபோது  முஸ்லிம்கள் இதற்கு எதிராக 05 வேளை தொழுகையிலும் அல்லாஹ்விடத்தில் குனுத் ஓதிய பாதுகாப்பு தேடிய வரலாற்றை மறக்க முடியது. 

மக்களின் உணர்வுகளை உணர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலமை தங்களின் பதவிகளை துறந்து மக்களோடு மக்களாக போராட்டத்தில் இறங்கி மக்களின் மனங்களில் இடம்பிடித்துக் கொண்டார்கள். இதன் வெளிப்பாடே கடந்த தேர்தல் முடிவு காட்டுகின்றது.

கடந்த ஆட்சி  எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலமையினால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் மீது எழுந்த மக்கள் எழுச்சியின்  பிரதிபலிப்பே கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாரை முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைக்குள் இருந்து அகில இலங்கை மக்கள் கட்சிக்கு சுமார் 34,000 வாக்குகள் அளிக்கப்பட்டது.     

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி குருனாகலில் 54,532 வாக்குகளும் புத்தளத்தில் 57,345 வாக்குகளும்  அம்பாரையில் 33,272 வாக்குகளும் பெறப்பட்டு மிகவும் சொற்ப வாக்குகளால் மூன்று நாடாளுமன்ற பிரதிநிதித்துவம்  இழக்கப்பட்டுள்ளது.

இதன் போது மூன்று மாவட்ட வேற்பாளர்கள் முக்கிஸ்த்தர்களுடன் கட்சியின் உயர்பீடம் கலதாலோசித்து  கிடைக்கபெற்ற ஒரு தேசியபட்டியல்  நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை புத்தளத்துக்கு வழக்கியது.

கல்முனை, சம்மாந்துறை போன்ற பிரதேசங்கள் 2000ஆம் ஆண்டு வரை அமைச்சரவை அமைச்சுகளை 30 வருடங்களுக்கு மேல் வைத்துக்கொண்டிருந்தன.

அம்பாறை மக்கள் விட்டு கொடுப்புகளுக்கும் தியாகங்களுக்கும் பரிச்சயமானவர்கள் தலைமைத்துவதுக்கு தலை வணங்கும் பண்புள்ளவர்கள் தேசிய பட்டியலுக்காக அல்லது அமைச்சரவை அமைச்சு அந்தஸ்த்துக்காக அல்லது இதிணைக்கள தலைவர் பதவிக்காக தலமைகளுக்கு எதிராக செயற்பட்டவரலாறு கிடையாது.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் தனிப்பட்ட விடங்களுக்காக அம்பாரை மாவட்ட மக்களை உசுப்பேத்திரத்தை கைவிட்டு மட்டகளப்பு மாவட்டத்தின் காத்தான்குடிக்கும்இகல்குடாவுக்கும் கிடைக்க வேண்டிய  தேசிய பட்டியலை பெற்றுக்கொள்ள முயற்சிப்பது நல்லது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைமை  அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டு பல ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரின் குற்றசாட்டு அவரின் அரசியல் முதிர்ச்சின்மையை அல்லது அறியாமையை காட்டுகிண்றது.

புதிய அரசாங்கம் உருவாகி புதிய வரவு-செலவு திட்டம் நிரைவேற்றப்பட்டு ஒரு மாதம் கூட முடிவடையாத நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் குற்றசாட்டு  அரச விடய செயற்பாட்டு நடைமுறை விடயங்களில் முன்னாள் அமைச்சரின் செயற்திறன் எவ்வாறு என்பதனை வெளிக்காட்டுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X