Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு
உலக நாடுகளுடன் ஒப்பீட்டளவில் எமது இலங்கை நாடு எயிட்ஸ் நோயில் தொற்றிலிருந்து பாதுப்பான நிலையிலுள்ளது. இலங்கையில் 647 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதில் அம்பாறையில் 20 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்எம்.நஸீர் தெரிவித்தார்.
இலங்கையை பொறுத்தமட்டடில், எயிட்ஸ் நோய் தொற்று தொடர்பான விழிப்புணர்வுகள், மக்கள் மத்தியில் ஒரு உயர்வான இடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டடிக்காட்டினார்.
திருக்கோவிலில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற எயிட்ஸ் விழிப்பணர்வு பேரணியிலும், ஒன்றுகூடல் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,“இலங்கை ஒட்டு மொத்தமாக சுமார் 647 பேர் எயிட்ஸ் நோய் தொற்றுக்குள்ளானவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாகவே தொற்றியுள்ளது.
இதில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் 20 பேர் ஏயிட்ஸ் நோய் தொற்றியிருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொத்துவில் பிரதேசத்தில் சுற்றுலாத் தலங்கள் காணப்படுகின்றமையால் நாம் விழிப்பாக வாழ வேண்டும். எனவே நாம் எல்லோரும் ஒரு தடவை இரத்தப் பரிசோதனைகளை செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்
52 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
57 minute ago
1 hours ago