2025 மே 17, சனிக்கிழமை

அம்பாறையில் பெண்கள், சிறுவர் மீதான 349 துஷ்;பிரயோகச் சம்பவங்கள்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 22 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்,எம்.எஸ்.எம். ஹனீபா

இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் அம்பாறை மாவட்டத்தில்; சிறுவர்; மற்றும் பெண்கள் மீதான 349 துஷ்;பிரயோகச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அம்மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.  

இலங்கை பொலிஸ் சேவையின் 150ஆவது வருட பூர்த்தியையிட்டு கடந்த ஒக்டோபர்; மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர்; மாதம் 30ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் நடமாடும் சேவை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஓரங்கமாக அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் திங்கட்கிழமை (21) 'சிறுவர்; மற்றும் பெண்கள் மீதான  துஷ்பிரயோகங்களிலிருந்து அவர்களை விடுவிப்பது' என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 142 சம்பவங்களும் பாலியல் சார்ந்த துஷ்பிரயோகம் தொடர்பில்; 97 சம்பவங்களும் பெண்கள் மீதான வன்முறை தொடர்பில்;  75 சம்பவங்களும் வீட்டு வன்முறை தொடர்பில் 35 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

இக்கூட்டத்தின்போது, சிறுவர் மற்றும் பெண்கள் மீதான குற்றச்செயல்களை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .