Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்தி பாதுகாப்பு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிழக்குப் பிராந்திய வன ஜீவராசிகள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் பி.எம்.வீரசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் பெரும்போகச் செய்கைக்கான விவசாய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'காட்டு யானைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மேலதிக நிதி கிடைக்கவுள்ளதால், எதிர்வரும் 2017ஆம் ஆண்டு இதற்கான வேலை பூரணப்படுத்தப்படும்.
மேலும், இவ்வேலைத்திட்டத்துக்காக தனியான அலுவலகம் அமைக்கப்படுவதுடன், யானைகளைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்புப் பிரிவும் உருவாக்கப்படவுள்ளது' என்றார்.
'பயிர்ச் செய்கைக் காலத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகமாகக் காணப்படும். இதன்போது, காட்டு யானைகளின் தொல்லையைக் கட்டுப்படுததுவதற்கு யானை வெடிகள் பயன்படுத்தப்படும் என்பதுடன், வன ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களையும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளோம்' என்றார்.
திருக்கோவில் பிரதேசத்திலிருந்து சாகாமம் பிரதேசம் வரையில் 45 கிலோமீற்றர் தூரத்துக்கு யானை தடுப்பு மின்சார வேலி அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தீகவாபியிலிருந்து 35 கிலோமீற்றர் தூரத்துக்கு முன்னெடுக்கப்பட்ட மின்சார வேலி அமைக்கும் வேலைத்திட்டம், காணிப் பிரச்சினை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது'; எனவும் அவர் கூறினார்.
11 minute ago
15 minute ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
5 hours ago
6 hours ago