2025 மே 08, வியாழக்கிழமை

அமெரிக்க ஆலோசகர் - ஊடகவியலாளர்கள் சந்திப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசகர் கேலி நாஸ் மற்றும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு, சாய்ந்தமருது ஸீ பிறீஸ் மண்டபத்தில் நேற்று (13) நடைபெற்றது.

குறித்த சிநேகபூர்வ சந்திப்பின்போது, ஏப்ரல் 21ஆம் திகதியின் பின்னரான நிலவரங்கள் அதன் பின்னர் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறிப்பாக முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள இறுக்கமான நிலை, குறித்த தாக்குதலின் பின்னர் ஊடகங்கள் எவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டன போன்ற விடயங்களும் எதிர்காலத்தில் ஊடகவியலாளர்களை பயிற்றுவிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

இந்தச் சந்திப்பில், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தின் பிரதிநிதி ஐவன் றசியா, ஐக்கிய அமெரிக்காவுக்கான இலங்கை துதரகத்தின் சார்பில் நௌசாட் ஜப்பார் ஆகியோரும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்திலுள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்  பேராசிரியர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பில் அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டதாக, அமெரிக்காவுக்கான இலங்கை துதரகத்தின் பிரதிநிதி நௌசாட் ஜப்பார் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X