2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அம்பாறை ஊடகவியலாளர் போரம் யாழ்ப்பாணம் விஜயம்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சமூக, பொதுநல செயற்பாட்டாளர்கள், நாளை (05) யாழ்ப்பாணத்துக்கு மூன்று நாள் கள விஜயம் மேற்கொள்ளவுள்ளனரென, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தின் செயலாளர் எம்.எஸ். முஹம்மட் ஹனீபா தெரிவித்தார்.

 

இராணுவத்தின் யாழ். மாவட்டக் கட்டளைத் தலைமையகத்தால், அம்மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மனித நேய வேலை திட்டங்களை நேரில் பார்வையிடுவதற்காகவே, இவர்கள், யாழ்ப்பாணம் விஜயம் செய்கின்றனர் என செயலாளர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் போரத்தின் ஏற்பாட்டில் புறப்படுகின்ற இவர்கள், யாழ்ப்பாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், கலந்தரையாடவுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .