2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அம்பாறை மாவட்ட சகவாழ்வு குழுக்கள் நுவரெலியா விஜயம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 23 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

இலங்கை உள்ளூராட்சி மன்ற சம்மேளனத்தின் ஏற்பாட்டில், அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட சகவாழ்வு குழுக்கள், நுவரெலியாவுக்கு  இன்று (23) விஜயம் செய்தது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள காரைதீவு, பொத்துவில் மற்றும் லாகுகல ஆகிய மூவினங்களையும் பிரதிபலிக்கின்ற பிரதேச சபைகளின் சகவாழ்வு குழுக்கள் இதிலே கலந்துகொண்டன.

மூன்று சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் சகவாழ்வு குழு உறுப்பினர்கள் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டிருந்தார்கள்.

நேற்று காலை இம் மூன்று பிரதேச சபைகளின் சகவாழ்வு குழுக்கள், காரைதீவில் இருந்து தமது பயணத்தை மேற்கொண்டன.

இலங்கை உள்ளூராட்சி மன்ற சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் பெருமாள் பிரதீப் தலைமையிலே, சகவாழ்வு குழுக்களின் முன்னேற்றம் பற்றி, நுவரெலியா மாநகர சபை  மண்டபத்திலே நாளை புதன்கிழமை (24) கலந்துரையாடல் முன்னெடுக்கப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .