எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 செப்டெம்பர் 29 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் இம்முறை 01 இலட்சத்தி 20 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளவுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கா தெரிவித்தார்.
அம்பாறை, சேனநாயக்கா சமுத்திரத்தில் வருடாந்த ஏர்பூட்டு விழாவும், சேனநாயக்கா சமுத்திரத்தில் மழை வேண்டி மும்மத விசேட பிரார்த்தனைகளும், சேனநாயக்கா சமுத்திர நீர்ப்பாசனக் குளத்தில் நேற்று (28) நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
கல்லோயா வலது கரை விதிவிட திட்ட முகாமையாளர் எம்.எம். நளீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், சென்ற சிறுபோகத்தில் விவசாயிகள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தார்கள் எனவும் அதற்கு நாம் ஒன்றிணைந்து முகங்கொடுத்தோம் எனவும் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் எதிர்காலத்திலும் இவ்வாறு ஒன்றிணைந்து மாத பேதமின்றிச் செயற்பட வேண்டுமெனவும் அப்போதுதான் எமது நாட்டில் இனங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்த முடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
11 minute ago
13 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
13 minute ago
34 minute ago
1 hours ago