Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஏ.றமீஸ்
அம்பாறை மாவட்டத்தில் தொடரும் மழையுடனான வானிலை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
இம்மாவட்டத்தின் ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளில் வசித்து வந்த 571 குடும்பங்களைச் சேர்ந்த 1,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.
தாழ்நிலப் பிரதேசங்களில் வசித்து வந்த பெருமளவிலான பொதுமக்கள் தமது உறவினர்களின் இல்லங்களில் இடம்பெயர்ந்துள்ளனர்.
மாவட்டத்தின் திருக்கோவில், ஆலையடிவேம்பு, உகன, காரைதீவு, தமண ஆகிய பிரதேச செலகப் பிரிவுகளிலேயே அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர்.
திருக்கோவில் பிரதேச செலகப் பிரிவில் 470 குடும்பங்களைச் சேர்ந்த 1,602 பேரும், ஆலையடிவேம்பு பிரதேச செலகப் பிரிவில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 89 பேரும், உகன பிரதேச செயலகப் பிரிவில் 44 குடும்பங்களைச் சேர்ந்த 157 பேரும், காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 47 பேரும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் வீசிவரும் பலத்த காற்றின் காரணமாக இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் அம்பாறை மாவட்டத்தின் எக்கல் ஓயா பகுதியில் 89.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி அதிகப்படியாக பதிவாகியுள்ளது.
அக்கரைப்பற்று பிரதேசத்தில் 72.5 மிலிலி மீற்றர் மழை வீழ்ச்சியும், அம்பாறை பகுதியில் 71.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், சாகாமம் பிரதேசத்தில் 67.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், பொத்துவில் பகுதியில் 62.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், றூபஸ் குளப் பிரதேசத்தில் 50.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகம் தெரிவிக்கின்றது.
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்து வருகின்றது. இம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருவதுடன், இடியுடன் கூடிய மழை பொழியும் சந்தர்பத்தில் பலத்த காற்றும் இப்பிராந்தியத்தில் வீசி வருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago