Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா, எம்.என்.எம்.அப்ராஸ்
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக 04 ஆயிரத்தி 342 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரத்தி 859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 68 வீடுகள் சேதமடைந்துள்ளன எனவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 449 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்தி 449 நபர்களும், காரைதீவு பிரதேச செயலாளர் பிரிவில் 55 குடும்பங்களைச் சேர்ந்த 181 நபர்களும், சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 05 குடும்பங்களைச் சேர்ந்த 26 பேரும் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும், அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, பொத்துவில், திருக்கோவில், லகுகல, பாணமை, அம்பாறை, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில். நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நட்பிட்டிமுனை, நாவிதன்வெளி, மருதமுனை ஆகிய தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள மக்களின் குடியிருப்புகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் இன்று (05) காலை 08.30 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலத்துக்குள் மஹாஓயா பிரதேசத்தில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சி 140 மில்லிமீற்றராகப் பதிவாகியுள்ளதாக, பொத்துவில் வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ. சாதிக் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago