Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மே 01 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் தொழில் எதிர்பார்ப்புடன் இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் சந்தை, அம்பாறை மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 05ஆம் திகதி காலை 09 மணி தொடக்கம் மாலை 02 மணி வரை நடைபெறவுள்ளதென, அம்பாறை மாவட்ட செயலாளர் துஷித பி. வணிகசிங்க, இன்று (01) தெரிவித்தார்.
தொழில் அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலகமும் ஒன்றிணைந்து, இதனை ஏற்பாடு செய்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
இத்தொழில் சந்தை, உள்நாட்டில் கூடுதலான வரவேற்பைப் பெற்றுள்ள தொழில் வழங்கும் நிறுவனங்கள், பயிற்சி வழங்கும் நிறுவனங்கள், தங்களது பதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.
தொழிலை எதிர்பார்த்திருப்போரை அந்த வெற்றிடங்களுக்காக இணைத்துக் கொள்ளல், தொழில் வழிகாட்டல் சேவை மற்றும் தொழில் திறவுகோல் சேவைகள், தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சிக் கற்கைநெறிகள் தொடர்பாக அறிவூட்டல் மற்றும் பயிற்சி நெறிக்காக ஈடுபடுத்துதல் போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளன.
நேர்முகப் பரீட்சையின் பொருட்டும், கல்வித் தகைமைச் சான்றிதழ்கள், ஏனைய தகமைகள் போன்றவற்றுடன் சுயவிவரக் கோவையுடனும், தேசிய அடையாள அட்டையுடனும் இத்தொழில் சந்தையில் கலந்துகொள்ளுமாறு, மாவட்ட செயலாளர் துஷித பி. வணிகசிங்க மேலும் குறிப்பிட்டார்.
20 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
58 minute ago
1 hours ago
1 hours ago