2025 மே 13, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மாவட்டத்தில் மீனவத் தொழில் பாதிப்பு

Editorial   / 2020 ஜனவரி 29 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்டத்தில் நிலவும் காற்றுடனான வானிலை காரணமாக, இம்மாவட்டத்தின் கடற்றொழில் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளதாக, கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கடையோரப் பிரதேசங்கள், கடற்பரப்பு போன்றவற்றில் கடந்த சில தினங்களாக வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக, கடற்றொழிலை மாத்திரம் நம்பி தமது வாழ்வாதாரத்தை நகர்த்திச் செல்லும் மீனர்வகள், கடந்த சில வாரங்களாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் உள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில் மாலை வேளைகளில் வீசுகின்ற பலத்த காற்றின் காரணமாக சில பிரதேசங்களில் கடல் அலை சுமார் பத்தடிக்கு மேல் உயர்வதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கரையோரப் பகுதிகளில் தரித்து வைக்கப்பட்டிருந்த சில வள்ளங்களும் படகுகளும், அலையினால் அள்ளுண்டு செல்லப்பட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, கடற்றொழிலில் ஈடுபட்ட சில மீனவர்களின் படகுகள் அலையின் வேகத்துக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் உள்ளதனால் கடற்றொழில் உபகரணங்கள் மிகுந்த சேதத்துக்குள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X