Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், சகா
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறை மாவட்டத்துக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படுமென, இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்ட நிலைப்பாடுகள் குறித்து ஆராயும் கூட்டமொன்று, காரைதீவு பிரதேசத்தில் நேற்று (11) நடைபெற்றது.
இதன்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் கருத்துத் தெரிவிக்கையில், “அம்பாறை மாவட்ட வேட்பாளர் தொடர்பான இறுதித் தீர்மானம், தமிழரசுக் கட்சியின் பங்காளிக் கட்சிகளான டெலோ இயக்கம், பளொட் இயக்கம் ஆகியவற்றில் வேட்பாளர் தெரிவின் இறுதித் தீர்மானம், திருமலை மாவட்டத்தில் நடைபெறும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்” என்றார்.
“அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள், அம்பாறை மாவட்டத்துக்கு ஒரு தேசியப்பட்டியல் பிரதியை நிச்சயம் தர வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்கிறார்கள். இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படுகிறது”
“நாங்கள் ஜனநாயகம் இல்லாத காலத்தில் கூட தேர்தலில் ஈடுபட்டிருக்கின்றோம். இப்பொழுது ஓரளவு ஜனநாயக சூழ்நிலை நிலவி வருகின்ற போதும், இப்போது பல குழுவினர், வெளியே வந்த தேர்தலில் ஈடுபடுகிறார்கள்.
“அம்பாறை மாவட்டத்தில் புதிதாக பல கட்சிகள், புதிய சின்னத்தில் களமிறங்குகின்றன. அவர்களது பின்னணி, அவர்களுக்குப் பின்னால் அரசாங்கம் உள்ளதா என்பதை மக்கள் அறிவார்கள். அவர்களை, மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
4 hours ago