2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அம்பாறையில் 23 பேர் தனிமைப்படுத்தலில்

Editorial   / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில், பாணாமை பிரதேசங்களில் 23 பேரை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

கடற்படையைச் சேர்ந்த ஒருவர் விடுமுறையில் பாணாமை சிங்கபுர பிரதேசத்துக்கு  வந்து சிலருடன் பழகியுள்ளார். சில நாள்களின் பின்னர் அவரது பாட்டி மரணித்த வீட்டுக்குச் சென்று மீண்டும் பாணாமை பிரதேசத்துக்கு வருகை தந்திருக்கின்றார்.

இவர், சுகாதார துறையினர், கடற்படை அதிகாரிகளினதும் அறிவுறுத்தல்களையும் பின்பற்றாது செயற்பட்டுள்ளார். இவரை, அம்பாறை பிராந்திய சுகாதார பணிமனை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும், தெரிவித்தார்.

இவரோடு தொடர்புகளைப் பேணியவர்கள் என்ற அடிப்படையில் பாணாமை சிங்கபுர பிரதேசத்தில் 17 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் தாதி உத்தியோகத்தரின் கணவரான மாத்தறையைச் சேர்ந்த கடற்படை சிப்பாய் ஒருவரும் சுகாதாரத் துறையினர், கடற்படை அதிகாரிகளினதும் அறிவிறுத்தல்களையும் பின்பற்றாது செயற்பட்டுள்ளார். அவர், பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.

இதன்போது அவருடன் வைத்தியசாலையில் கடமையாற்றும் சிலரும் பலகியுள்ளார்கள். இதனடிப்படையில் பொத்துவில் வைத்தியசாலையில் கடமையாற்றும் 06 பேர் விடுதிகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனரெனவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .