Editorial / 2020 மே 20 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை, தெஹியத்தக்கண்டி பிரதேசத்தில் திங்கட்கிழமை (18) மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக 289 வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், 1,058 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
சில வீடுகள் முழுமையாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாவும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை புனரமைப்பதற்கு முதற்கட்டமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் 10,000 ரூபாய் நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள வீடுகளில் விவரம் கிடைத்ததும் முழுமையான நட்டஈட்டுத் தொகை வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கூறினார்.
மேலும், அம்பாறை மாவட்டத்தில் உகன, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை, திருக்கோவில், நாவிதன்வெளி, தமன, அட்டாளைச்சேனை, கல்முனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும், தெரிவித்தார்.
11 minute ago
15 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
15 minute ago
18 minute ago