2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அம்பாறையில் அறுவடை செய்யப்படவிருந்த வயல்களில் வெள்ளம்

Freelancer   / 2023 பெப்ரவரி 19 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக அறுவடை செய்யப்படவிருந்த சுமார் 05 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.

ஆலையடிவேம்பு, இறக்காமம், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை, காரைதீவு மற்றும் நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களிலுள்ள நெல் வயல்களே நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றார்கள்.

அம்பாறை மாவட்டத்தில் 50 சதவீதமான நெல் அறுவடையே நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறுவடை செய்த நெல்லை குநைந்த விலைக்கே தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கம் உத்தரவாதம விலைக்கு நெல் கொள்வனவு செய்வதாக அறிவித்தும் ஆக்கபூர்வமான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் இதனால் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனா.

இதேவேளை அறுவடை செய்த நெல்லை உலரவைப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .