Princiya Dixci / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி, விடுமுறை பெற்று அம்பாறை பகுதியிலுள்ள தமது வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.
அத்தோடு, மற்றுமொரு பஸ் நடத்துநரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் இரு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கருத்துரைக்கையில், தற்போது கல்முனை பிராந்தியத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 32 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாமெனவும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் செல்ல வேண்டாமெனவும் இதனை உதாசீனம் செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பகுதியினர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
அம்பாறை - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026