2025 மே 12, திங்கட்கிழமை

அம்பாறையில் டெங்கொழிப்பு நடவடிக்கை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 டிசெம்பர் 03 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை, அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் டெங்கொழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எம். இஸ்மாயில் தெரிவித்தார்.

டெங்கொழிப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவினர், பொலிஸார், இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து, வீடு வீடாகச் சென்று டெங்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கூறினார்.

அத்துடன், ஒலுவில், பாலமுனை, திராய்க்கேணி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களிலும், டெங்கொழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும், அவர் கூறினார்.

சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து, அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றன.

தென்னம் குறும்பை, யோகட் கப், வெற்று போத்தல்கள், வெற்று டயர்கள், பொலிதீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்ற வேண்டுமெனவும், பொதுமக்களிடம் கேட்டுள்ளார்.

அதேவேளை, வெற்றுக் காணிகளை வைத்திருப்போர், டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்கும் பொருட்டு, ஒரு வார காலத்துக்குள் காணிகளைத் துப்பரவு செய்யுமாறும் கூறிய அவர், டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான இடங்களை வைத்திருப்பவர்கள் மீதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X