Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை - கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
இதனடிப்படையில், கல்முனை நகரம், மணல்சேனை, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவந்தியமேடு ஆகிய பகுதிகளில் காலை 08.45 மணி முதல் மாலை 04.30 மணி வரை, நாளை மறுதினம் (05) மின் தடைப்படும்.
08ஆம் திகதி, பாலமுனை, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05.30 வரையும் 10ஆம் திகதி, மருதமுனை, துறைவந்தியமேடு, பெரியநீலாவணை ஆகிய பகுதிகளில் 08.45 மணி முதல் மாலை 04.30 மணி வரையும் மின் தடைப்படும்.
11ஆம் திகதி, ஹிஜ்ராபுரம், சம்புமடு ஆகிய பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும், 12ஆம் திகதி, கல்முனை, சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பள்ளிவாசல் வீதி, காசிம் வீதி, அலியார் வீதி, சாஹி கல்லூரி வீதி, கல்முனை நகரம், கல்முனைக்குடி பகுதிகளில் காலை 08.45 முதல் மாலை 04.30 மணி வரையும், மின் தடைப்படும்.
14ஆம் திகதி, மீலாத்நகர், அட்டாளைச்சேனை பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 வரையும் 16ஆம் திகதி, காரைதீவின் பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.30 மணி வரையும் 17ஆம் திகதி, அஷ்ரப்நகர், ஹிறா நகர் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 வரையும், மின் தடைப்படும்.
19ஆம் திகதி, ஹிஜ்ராபுரம், சம்புமடு ஆகிய பகுதிகளிலிலும் 21ஆம் திகதி, அட்டப்பளம், நிந்தவூர் பகுதிகளிலிலும் காலை 08.30 மணி முதல் மாலை 05 வரையும், மின் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
3 minute ago
4 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
4 hours ago
5 hours ago
7 hours ago