2025 மே 14, புதன்கிழமை

அம்பாறையில் மீனவர்கள் கடலுக்கு செல்லமுடியாத நிலை

Editorial   / 2020 மே 13 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்   

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் பலவற்றிலும் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் மாலை வேளையில் கடும் காற்றுடன், மழையும் பெய்து வருகின்றது.

இதனால் தற்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படுவதோடு, மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நாட்டில் கொவிட் - 19 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டமை தொடக்கம் தற்போது வரை மீனவர் சமூகம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், இவ்வாரம் முதல் கடல் கொந்தளிப்பாக உள்ளதால் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை காணப்படுவதாக, மீனவர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

இதேவேளை, ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலங்களில் மீன்பிடிப்பதற்காக அனுமதி வழங்கப்பட்ட போதும் தூர இடங்களுக்குச் சென்று மீனை விற்க முடியாத நிலை இருந்ததாகவும், மீனவர்கள் சுட்டிக்காட்டினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X