2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

அம்பாறையில் வங்கி ஊழியர்களுக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், சகா

அம்பாறை பிராந்தியத்தில் உள்ள  அரச வங்கியொன்றின் சில கிளைகளில் கடமை புரியும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதன் காரணமாக, அவ்வங்கிக் கிளைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.

கல்முனையில் அமைந்துள்ள மேற்படி வங்கியின் முகாமையாளர் உட்பட 06 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை இன்று (24) அடையாளம் காணப்பட்டதை  அடுத்து, அவ்வங்கி இன்றிலிருந்து மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டதுடன், அதன் அறிக்கை இன்று வெளியிட்டதன் பின்னரே தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், வங்கி கிளையையும் மூடுவதற்கு சுகாதார துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அவ்வங்கிக்கு இன்று காலை வந்த சுகாதார அதிகாரிகள் வங்கியிலிருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேற்றியதுடன், தொற்றாளர்களென அடையாளம் காணப்பட்டோரை, வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.

அதேவேளை, சாய்ந்தமருதுவில் அமைந்துள்ள மேற்படி வங்கிக்கிளையின் ஊழியர்கள் சிலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை கடந்த வாரம் அடையாளம் காணப்பட்டதையடுத்து. அக்கிளையும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரைதீவில் அமைந்துள்ள மேற்படி அரச வங்கியின் கிளை ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, அவ்வங்கியும் மூடப்பட்டிருந்து. பின்னர் இன்று (24) முதல் வழமைபோல் அவ்வங்கி திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .