Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
பொதுமக்களோடு இணைந்து பணியாற்றுகின்ற அட்டாளைச்சேனை பிரதேச அரச உத்தியோகத்தர்களுக்கு பாதுகாப்பான புலன்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை வழங்கும் செயலமர்வு இன்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் அனுசரணையில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,அம்பாறை மாவட்ட சமூக நல்வாழ்வு அமைப்பின் திட்ட முகாமையாளர் கே.பிரேமலத மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கல்முனை பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.அஸ்ரப் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இதன்போது, புலம்பெயர் வெளிநாட்டு தொழில்வாய்ப்பில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு அவர்களின் நலன், பாதுகாப்பு, ஆலோசனைகளை வழங்குதல்,தொழிலாளர்களின் உரிமைகள்,பயிற்சிகள் தொடர்பான வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குதல், வெளிநாடு சென்றுள்ள குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தொழில்வழிகாட்டல் ஆலோசனைகளை வழங்குதல் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கள உத்தியோகத்தர்களாக கடமையாற்றி வரும் திவிநெகும உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
45 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago