2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு வேண்டும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அரச உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென, அக்கரைப்பற்று மற்றும் அம்பாறை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எஸ். ஜெகன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட உப தபாலகங்களில் கடமையாற்றும் உப தபால் அதிபர்களுக்கான “தலைமைத்துவமும், ஆளுமையைக் கட்டியெழுப்புதலும்” எனும் தொனிப்பொருளிலான செயலமர்வு, நிந்தவூர் மாவட்ட தொழில் பயிற்சி நிலையத்தில் நேற்று (07) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அஞ்சல் அத்தியட்சகர் அலுவலக பிரதம இலிகிதர் ஏ.சீ. நளீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், தபால் திணைக்களத்தை மேலும் அபிவிருத்தி செய்து, மக்களுக்கு விரைவாகவும் சிறப்பாகவும் சேவையை வழங்குவதற்காக, அரசாங்கத்தால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

புதிய தகவல் தொழில்நுட்ப ரீதியிலான அறிவை ஒவ்வொரு உத்தியோகத்தரும் அறிந்திருத்தல் வேண்டுமெனவும் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களுக்கு உத்தியோகத்தர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X