Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாய்ந்தமருது பிரதேசத்திலுள்ள அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு நிரந்தரக் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் காணி உத்தியோகத்தர் எம்.ஜே.ஏ.ஹஸ்மி தலைமையில், நேற்று (09) நடைபெற்றது.
இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஃபர், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.என்.ஏ.மலிக் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, 06 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகளிடம் பத்திரங்களைக் கையளித்தனர்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், பிரதேச வைத்தியசாலை, அல்-ஹிலால் வித்தியாலயம், அல்-ஜலால் வித்தியாலயம், அல்-கமறூன் வித்தியாலயம், வைத்தியசாலை வீதி உப தபாலகம் என்பவற்றுக்கே, காணிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
47 minute ago
2 hours ago
2 hours ago