2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

‘அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு’

Editorial   / 2020 மே 17 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா, ஏ.எல்.எம்.ஷினாஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்கு மக்களின் நலன் கருதி, ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமென, முன்னாள் சமூக வலுவூட்டல், சிறு கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

அம்பாறையில், அவரது அலுவலகத்தில் நேற்று (16) மாலை நடைபெற்ற ஊடகவிலாளர் மாநாட்டின் போது, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “ஆரம்பத்திலேயே துறைமுகம், விமான நிலையத்தை மூடியிருந்தால், எமது நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடிந்திருக்கும். அதனை அரசாங்கம் தவறவிட்டுள்ளது.

“ஜனாதிபதியும் பிரதமரும், அமைச்சர்களும், சுகாதாரத் துறையினரும் இரு வாரங்களுக்கு ஒருமுறை பி.சி.ஆர் பரிசோதனை செய்து கொள்கின்றனர். ஆனால், பொதுமக்கள் எந்த பரிசோதனையும் செய்யப்படாமல் உள்ளனர்.

“நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் பரிசோதனை செய்ய வேண்டும். இதற்கு உதவுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், அரசாங்கத்துடன் பேசினோம்.

“இயந்திரம், தொழில்நுட்பம் பற்றாக்குறையாக உள்ளது என்று அரசாங்கம் தெரிவித்தது. மக்களின் நலன் கருதி, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வோம் என நாம் கூறியபோதும் அதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .