Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அரிசி வகைகளுக்கு செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை (16) காலை 6.00 மணிக்கு, பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் பொதுமக்கள் நடந்துகொள்ள வேண்டிய ஒழுங்குமுறைகள், சுகாதார கண்காணிப்பு நடவடிக்கைகள், வியாபார நிலையங்களில் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு முறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் கூட்டம், கல்முனை மாநகர சபை முதல்வர் ஏ.எம்.றக்கீப் தலைமையில், புதன்கிழமை(15) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மொத்த விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் மரக்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலைகள் தொடர்பில், நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
இதன்போதே பாதுகாப்பு நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இந்தத் தகவல்களை தெரிவித்தனர்.
'பொதுமக்களை ஏமாற்றி விலைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. இது சட்டத்தை மீறும் செயலாகும். அத்தியாவசியப் பொருட்களும் வியாபார நிலையங்களில் வேறுபட்ட விலைகளில் விற்பனை செய்கின்றனர். இதனைத் தடுக்க வேண்டும்.
'தற்போது செயற்கையாக அரிசி தட்டுப்பாட்டை சில வர்த்தகர்கள் ஏற்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். பாதுகாப்பு அதிகார சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தை மீறுவோர் மீது நீதிமன்றத்தின் ஊடாக வழக்கு தொடர எமக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனை நாம் நிறைவேற்றுவோம்' என்றும் தெரிவித்தனர்
இக்கலந்துரையாடலில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், நுகர்வோர் அதிகார சபையினர், வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
38 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
46 minute ago
2 hours ago