2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அறநெறி ஆசிரியர்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

A.K.M. Ramzy   / 2020 மே 07 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்

 அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கொவிட்-19 தொற்று அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட அறநெறிக்கல்வி ஆசிரியர்களின் நலன் கருதி

நலன்சார் உதவித்திட்டங்களை கல்முனை சிவநெறி அறப்பணி மன்றம் முன்னெடுத்து வருகின்றது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கல்வி கற்பிக்கும் சில அறநெறி ஆசிரியர்களுக்கான உலர் உணவுப் பொதியினை கொழும்பு மனிதநேயம்

அமைப்பின் நிதியுதவியுடன் கல்முனை சிவநெறி அறப்பணி  வழங்கி வைத்தது.

நிகழ்வில் கல்முனை சிவநெறி அறப்பணி மன்றத்தின் தலைவர் வை.கஜேந்திரா, செயலாளர் லோ.சரவணபவன், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர்

க.ஜெயராஜ்  ஆலையடிவேம்பு பிரதேச கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினி தேவராஜ் உள்ளிட்ட மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிவாரணப்பொருள்களை வழங்கி வைத்தனர்.

இதேநேரம் அம்பாறை மாவட்டத்தில் மிகவும் பின்தங்கப்பட்ட பொத்துவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட ரொட்டை, செங்காமம் கிராமங்களில் 76 குடும்பங்களுக்கும்

நேற்றைய தினம் கல்முனை சிவநெறி அறப்பணி மன்றம் நிவாரணப்பொருள்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .