2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

அறிக்கை வழங்கியவருக்கு தண்டம்

Editorial   / 2023 ஓகஸ்ட் 20 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ஹர் இப்றாஹிம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள மருத்துவ பரிசோதனை நிலையமொன்றில் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக தொகைக்கு இரத்தமாதிரி பரிசோதனை அறிக்கை வழங்கிய இரு மருத்துவமனை உரிமையாளர்களுக்கு எதிராகத் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தலா 1 இலட்சம் ரூபாய் தண்டப்பணம்  அறவிடப்படப்பட்டுள்ளது. 

 

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவுக்கு கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சகலிய பண்டார தெரிவித்தார் .

இவ்வாறு பாவனையாளர்களுக்கு எதிராக செயற்படுவோர் சம்பந்தமான முறைப்பாடுகளை 1977 என்ற இலக்கத்திற்கு அல்லது 0632222355 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X