2025 மே 08, வியாழக்கிழமை

அறுகம்பேயில் விசேட வேலைத்திட்டம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்

சுற்றுலாத்துறைக்குப் புகழ்போன அறுகம்பே பிரதேசத்தையும் அதனை அன்டிய காட்டுப்பகுதிகளின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் வகையில், பொத்துவில், அறுகம்பே அபிவிருத்தி ஒன்றியம், விசேட வேலைத்திட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக, அவ் ஒன்றியத்தின் தலைவரும் இயன் மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்தார்.

சுற்றாடலை மாசுபடுத்தும் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் இவ்விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொத்துவில், அறுகம்பே, பானம ஆகிய பிரதேசங்களில் தேங்குகின்ற தின்மக்கழிவுகள் முறையாகப் பேனப்படாது, பொத்துவில் - பானம பிரதான வீதியின் காட்டுப்பகுதிகளில் கொட்டப்படுவதால், அப்பகுதிகளிலுள்ள மிருங்களும் பறவைகளும் பிளாஸ்டிக், பொலிதீன் பொருள்களை உட்கொண்டு இறப்பதுடன், சுற்றாடலும் பாதிக்கப்படுவதாக, இயன் மருத்துவர் ஹாஜித் தெரிவித்தார்.

 “சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்போம், மிருகங்களைப் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இவ்விசேட வேலைத்திட்டத்தின் பிரதான நிகழ்வுகள், ஓகஸ்ட் 31ஆம், செப்டெம்பர் 01ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சபை, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், இராணுவத்தினர், ரோட்டரி கழகம், உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பொது அமைப்புகளின் பங்களிப்புடன் இந்நிகழ்வு நடைபெறவுள்ளதுடன், இதில் இணைந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் 076 7016 888 எனும் அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X