2025 ஜூலை 05, சனிக்கிழமை

அலுவலக இடமாற்றம் இரத்து

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 03 , மு.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சாய்ந்தமருதிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுவது இரத்துச் செயய்யப்பட்டுள்ளதாக இளைஞர்; சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உத்தியோகஸ்தர் யூ.எல்.ஏ.மஜீட் இன்று  தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் முயற்சியினால், 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சாய்ந்தமருது கடற்கரை வீதியிலுள்ள இளைஞர் பயிற்சி நிலையத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்ட இளைஞர், யுவதிகளுக்கு பல்வேறு சேவைகள் ஆற்றிவந்த இந்த அலுவலகத்தை அம்பாறை நகருக்கு இடமாற்றுமாறு இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்  கடந்த வாரம் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

விளையாட்டுத்துறை பிரதியமைச்சர்; எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் சுகாதாரப் பிரதியமைச்சர்; பைஷால் காசீம் மேற்கொண்ட முயற்சியினால், அலுவலக இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .